வாருங்கள், கல்விக்காக ஏங்கும் ஏழை மாணவர்களுக்கு உதவுவோம். Come, Let help the poor students.
Friday, 28 February 2020
அன்பிற்குரியவர்களே ! இன்று நாம் தேசிய அறிவியல் தினம் கொண்டாடுகிறோம். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 28ம் நாள் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது சிறந்த அறிவியல் மேதையான சர்.சி.வி.இராமன் அவர்களின் நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட இந்த நாளில் கொண்டாடப்படுகிறது.
அறிவியலின் முக்கியத்துவம் என்ன? அறிவியல் எங்கே இருந்து கிடைக்கிறது?. தினசரி வாழ்க்கையில் நாம் அறிவியலின் துணை இல்லாமல் ஒரு அடி கூட எடுத்து வைக்கமுடியாது. காலையில் கண்விழித்து எழுவது முதல் இரவில் படுப்பது வரை நாம் அறிவியலை பயன்படுத்துகிறோம். அறிவியலாகவே வாழ்கிறோம். காலையில் முதலில் பல் தேய்க்க தொடங்குவது முதல் அதாவது கைகளை மடக்குவதிலிருந்து அனைத்திலுமே அறிவியல் நிறைந்து இருக்கிறது. ரோபோட் என்பது அறிவியல் வளர்ச்சி எங்கிறோம். அந்த வளர்ச்சிக்கு முதல் எடுத்துக்காட்டே மனிதன் தான். குழந்தைகள் விளையாடும் அனைத்து விளையாட்டிலும் அறிவியல் உள்ளது. குழந்தைகளுக்கு அறிவியலின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுப்போம். குழந்தைகளை விளையாட அனுமதிப்போம். புத்தகம் வாசிக்க கற்றுக் கொடுப்போம். மனிதன் அறிவியலோடு இணைந்து மாண்புள்ளவனாக வளரட்டும். வாழட்டும். மற்றவர்களையும் வாழவைக்கட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment