Tuesday, 7 April 2015

அன்பு  

 குடும்பம் என்பது, அன்பினால் கூடி   இன்பத்துடன்    நிறைவாக  வாழ்வை  நடத்தி வருவதாகும்.   அன்பைக் குறித்து திருவள்ளுவர் இப்படி சொல்கிறார்,         

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.
(78)
விளக்கம்:

உள்ளத்திலே அன்பு இல்லாதவருடைய இல்வாழ்க்கையானது, வன்மையான பாலை நிலத்திலே  காய்ந்தமரம்    தளிர்த்தாற்போல்    நிலையற்றதாம் என்று குறள் கூறுகிறது. 

         அன்பு செய்து வாழ வேண்டுமென்று சொன்னால் , ஏன் அன்பு செய்து வாழ வேண்டுமென்று என்று ஒரு கேள்வி. அன்பு செய்து வாழும்போது நமது மனம் லேசாகிறது.      மற்றவர்களுடைய      மனம்      சந்தோஷத்தால்     நிறைகிறது. அன்பினைக்    கொடுக்கும்   போது       நமக்கு     எதிராளி   இல்லாமல் ஆகிறது. எதிராளி    இல்லாமல்     ஆகும்போது      வன்முறை      இல்லாமல்      ஆகிறது. வன்முறை  இல்லாமல் ஆகும்போது  பூவுலகமே சொர்க்கம் ஆகும். இவ்வளவு மதிப்பு மிக்க அன்பை நாம் குடும்பத்தில் தான் கற்றுக் கொள்ள முடியும்.

No comments:

Post a Comment